தக்காளித் தோசை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 1 1/2 கப்
2. உளுத்தம்பருப்பு – 5 தேக்கரண்டி
3. தக்காளி – 4 எண்ணம்
4. தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
5. சீரகம் – 1 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் – 10 என்ணம்
7. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சரிசியையும், உளுத்தம் பருப்பையும் கழுவி நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. மிளகாய் வற்றலுடன் தண்ணீர் சேர்த்துத் தனியாக ஊற வைக்கவும்.
2. தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. சீரகம், பெருங்காயம், ஊற வைத்த மிளகாய் வற்றல் ஆகியவற்றை அரைத்து விழுதாக எடுத்து வைக்கவும்.
4. பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். அத்துடன் தக்காளியையும் சேர்த்து அரைத்துத் தனியாக வைக்கவும்.
5. அரைத்து வைத்திருக்கும் விழுது, மாவு ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி வைக்கவும்.
6. ஒரு மணி நேரம் கழித்து மாவைத் தோசைக் கல்லில் தோசைகளாக ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: தக்காளித் தோசைக்கு மல்லித்தழைச் சட்னி நல்ல சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.