ராகி முருங்கை அடை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு – 1 கப்
2. முருங்கை கீரை – 1 கப்
3. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
4. மிளகாய் – 4 எண்ணம்
5. உப்பு – தேவையான அளவு
6. நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. முருங்கை கீரையை நன்றாகக் கழுவி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் முருங்கை கீரையைச் சேர்த்து வதக்கி, பின்னர் ஆற வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கீரை, ராகி மாவு மற்றும் உப்பு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் கலந்து பிசைந்து எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.
5. வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் உருண்டைகளை அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் இட்டுச் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: இந்த அடைத்தோசைக்குத் தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.