ரவை தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை – 200 கிராம்
2. அரிசி மாவு – 100 கிராம்
3. மைதா – 2 மேசைக்கரண்டி
4. கடலைமாவு – 1 மேசைக்கரண்டி
5. தயிர் - 2 மேசைக்கரண்டி
6. உடைத்த மிளகு - 10 எண்ணம்
7. சீரகம் - 10 கிராம்
8. முந்திரிப் பருப்பு - 25 கிராம்
9. தேங்காய்த் துருவல் - சிறிது
10. இஞ்சி - சிறிது
11. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
12. கறிவேப்பிலை - சிறிது
13. மல்லித் தழை - சிறிது
14. உப்பு - தேவையான அளவு
15. பெருங்காயத் தூள் - தேவையான அளவு
16. எண்ணெய் - தேவையான அளவு
17. நெய் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. ரவை, அரிசி மாவு, மைதா, கடலை மாவை உப்பு, பெருங்காயத்தூள், தயிர் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றிக் கட்டிப்படாமல் கரைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போன்றவைகளைப் போட்டுத் தாளிக்கவும்.
3. தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய மல்லித் தழையும் சேர்த்துக் குறைந்தது ஒரு மணிநேரம் வைத்திருக்கவும்.
4. இந்த மாவு தோசை வார்ப்பதற்கேற்றவாறு சிறிது தண்ணீர் போல் இருக்க வேண்டும். எனவே தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
5. அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை வட்ட வடிவத்திற்கேற்றவாறு ஊற்றவும்.
6. தோசையின் அடிப்பாகம் முறுகலாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு ஓரங்களில் எண்ணெய் ஊற்றவும்.
7. முறுகலாக வந்தவுடன் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.