கோதுமை மாவு தோசை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு – 200 கிராம்
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
4. கறிவேப்பிலை – சிறிது
5. உப்பு – தேவையான அளவு
6. எண்ணெய் – சிறிது
செய்முறை:
1. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
3. கரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
4. மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தண்ணீர் நிலையிலோ இல்லாமல் இருக்கும்படியாகத் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
5. அடுப்பில் தோசைக் கல்லைச் சூடாக்கிப் பின் தோசைக்கான மாவை ஊற்றவும்.
6. அடிப்பாகம் வெந்த பின்பு திருப்பிப் போடவும்.
7. திருப்பிப் போட்ட பின்பு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு:
கோதுமை மாவு ஊற்றியவுடன் தோசைக்கல்லில் ஓரளவு வெந்துவிடும். இந்த மாவைத் தோசைக்கல்லில் நடுவில் ஊற்றி இழுப்பதற்கு முன்பு கெட்டிப்பட்டுவிடும் என்பதால் மாவை ஓரங்களில் ஊற்றிக் கடைசியாக நடுவிலுள்ள இடத்தை நிரப்பிவிடுவது நல்லது.
எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.