சிக்கன் குருமா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் – 3/4 கிலோ
2. வெங்காயம் - 300 கிராம்
3. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
4. மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
5. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
6. முந்திரிப் பருப்புத் தூள் - 2 மேசைக் கரண்டி
7. பச்சை மிளகாய் - 5
8. இஞ்சிப் பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
9. தயிர் - 3 மேசைக் கரண்டி
11. தேங்காய்ப்பால் – 250 மி.லி
12. எலுமிச்சைச் சாறு – 1 மேசைக் கரண்டி
13. மல்லித்தழை (நறுக்கியது) - 2 தேக்கரண்டி
14. பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிது
15. எண்ணெய் - 4 மேசைக் கரண்டி
16. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கோழிக்கறியைக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழையைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
3. தயிர், உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் கோழிக்கறித் துண்டுகளை ஊற வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், அதில் பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
5. நறுக்கி வைத்த வெங்காயத்தைச் சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை மிதமான வெப்பத்தில் வதக்கவும்.
6. அதில் இஞ்சிப் பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகுத் தூள், கொத்தமல்லித் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் கோழிக் கறித் துண்டுகளைச் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலும் கிளறவும்.
8. பின்னர் அதில் தண்ணீர், தேங்காய் பால், முந்திரிப் பருப்புத் தூள் சேர்க்கவும்.
9. கோழிக்கறி வெந்தவுடன், அதில் எலுமிச்சைச் சாறைச் சேர்த்து, மல்லித்தழை தூவி இறக்கவும்.
10. தண்ணீர் வற்றி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.