பெப்பர் சில்லி சிக்கன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. எலும்பில்லாத தனிக் கோழிக்கறி - 1/4 கிலோ
2. முட்டை - 1 எண்ணம்
3. கார்ன்ப்ளவர் - 1 தேக்கரண்டி
4. தயிர் - 50 மி.லி.
5. இஞ்சிப் பூண்டு விழுது - 1தேக்கரண்டி
6. மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
8. கரம்மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
9. பச்சமிளகாய் - 3 எண்ணம்
10. வெங்காயம் - 1 எண்ணம்
11. மல்லித்தழை - சிறிது
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சுத்தம் செய்த கோழிக்கறியுடன் முட்டையை உடைத்து ஊற்றவும்.
2. அத்துடன் கார்ன்ப்ளவர், தயிர், இஞ்சிப் பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகுத்தூள், பச்சமிளகாய், கரம்மசாலாத்தூள், உப்பு என்று அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கனைப் போட்டுப் பொறித்து எடுத்துத் தனியாக வைக்கவும்.
4. வெங்காயத்தையும் அதே எண்ணெயில் இலேசாகப் பொறித்து எடுத்துத் தனியாக வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, பொறித்த சிக்கன் மற்றும் மிளகுத்தூள், பச்சை மிளகாய், மல்லித்தழை போட்டு வதக்கவும்.
6. கடைசியில் அதன் மேல் பொறித்த வெங்காயம் போட்டுக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.