கோழிக்கறி வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 500 கிராம்
2. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
3. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
4. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கோழிக்கறியை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், இஞ்சிப்பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒன்றாகப் பிசறிக்கொள்ளவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிசறிய கலவையைப் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டே நன்கு கிளறவும்.
4. மிதமான நெருப்பில் தண்ணீர் போன்ற அந்தக் கலவையுடன் கோழிக்கறியைச் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
5. இடையிடையே மூடியைத் திறந்து நன்கு கிளறி விடவேண்டும்.
6. கோழிக்கறி வெந்துவிட்டதா என்பதை அறிய கோழிக்கறித்துண்டை எடுத்து அழுத்திப் பார்க்க வேண்டும்.
7. கோழிக்கறி மிருதுவாக இருந்தால் வெந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
8. கடைசியில் கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.