ஜிஞ்சர் சிக்கன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 1 கிலோ
2. இஞ்சி - 2 துண்டு
3. பூண்டு - 10 பல்
4. மிளகாய்ப் பொடி - 3 தேக்கரண்டி
5. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
6. தக்காளி - 200 கிராம்
7. வெங்காயம் - 100 கிராம்
8. மல்லித்தழை - சிறிது
9. எண்ணெய் 150 கிராம்
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் பூண்டை விழுதாக அரைத்து வைக்கவும்.
2. தக்காளியையும் நன்கு அரைத்து வைக்கவும்.
3. இஞ்சியை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டுச் சிவக்க விட்டு, அதில் அரைத்து வைத்திருக்கும் பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
5. அத்துடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனைக் கொட்டி வதக்கவும்.
6. அதில், நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
7. சிக்கன் வெந்ததும் அரைத்த தக்காளி விழுதைப் போட்டு கொதிக்க விடவும்.
8. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.