சிக்கன் புலாவ்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பாஸ்மதி அரிசி - 200 கிராம்
2. கோழிக்கறி - 300 கிராம்
3. இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. பட்டை - 2 எண்ணம்
6. ஏலக்காய் - 2 எண்ணம்
7. கிராம்பு - 2 எண்ணம்
8. தயிர் - 1 மேசைக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. சிக்கன் துண்டுகளை தயிர், உப்பு, இஞ்சிப்பூண்டு விழுது, பச்சைமிளகாய், மல்லித்தழை சேர்த்துப் பிரட்டி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பாஸ்மதி அரிசியைக் கழுவித் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் 1 கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. அதில் ஊறிய சிக்கன் கலவையை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.
5. சிக்கன் பாதி வெந்ததும், அரிசியை ஊறவைத்த தண்ணீரோடு உப்பு சேர்த்து வேகவிடவும்.
6. கடைசியாக, மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.