கோழிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி – 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் – 25 எண்ணம்
3. தக்காளி – 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
5. இஞ்சிப் பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
6. மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
7. மல்லித் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
8. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
9. சோம்பு – 1 தேக்கரண்டி
10. ஏலக்காய் – 2 எண்ணம்
11. கிராம்பு – 2 எண்ணம்
12. பட்டை – 1 துண்டு
13. கறிவேப்பிலை – சிறிது
14. மல்லித்தழை – சிறிது
15. உப்பு – தேவையான அளவு
16. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. கோழிக்கறியைத் தோல் மற்றும் கொழுப்பு நீக்கி, மஞ்சள் தூள், வினிகர் சேர்த்து சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தில் இரு பங்கு, ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும், சோம்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
5. அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். வாணலியின் வெப்பத்திலேயே பொடிகள் வறுபட்டு விடும்.
6. ஆறியதும் அதை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
7. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும்.
8. ஏலக்காய் வெடித்ததும் இஞ்சிப் பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
9. அதனுடன் மீதமுள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
10. வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
11. தக்காளி குழைந்ததும் கோழித்துண்டுகளைச் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
12. அரைத்த வைத்திருக்கும் மசாலா, மஞ்சள்தூள், தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறிப் பாத்திரத்தை மூடி மிதமான நெருப்பில் வேக விடவும்.
13. கறி வெந்ததும், அதை இறக்கி வைத்து மல்லித்தழை தூவிக் கிளறி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.