பெப்பர் சிக்கன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் -1/2 கிலோ
2. வெங்காயம் - 3 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
6. தயிர் - 2 தேக்கரண்டி
7. எலுமிச்சைச்சாறு - 1/2 தேக்கரண்டி
8. மிளகுத்தூள் - 3 தேக்கரண்டி
9. கரம்மசாலா - 1/2 தேக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சிக்கன், தயிர், உப்பு, எலுமிச்சைச்சாறு, எண்ணெய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. தக்காளி பத்து நிமிடங்கள் வேகவைத்து ஆறியவுடன் தக்காளியைத் தோல் உரித்து மிக்சியில் தக்காளி, வெங்காயம், மல்லித்தழை, இஞ்சி பூண்டு விழுது, மசாலாவைச் சேர்து நன்றாக அரைக்கவும்.
3. குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் சிக்கன் சேர்த்து வதக்கவும்.
4. பத்து நிமிடம் கழித்து அரைத்த விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்த பிறகு குக்கரை முடி இரண்டு அல்லது மூன்று விசில் விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.