கோழி உப்புக் கறி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோழிக் கறி - 1 கிலோ
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
5. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
6. பூண்டு - 5 பல்
7. மஞ்சள் பொடி - 1 மேசைக்கரண்டி
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. சோம்பு - 1 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை (நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
12. நல்லெண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் கோழிக்கறியைச் சிறிய துண்டுகளாக வெட்டி, நன்றாகக் கழுவி மஞ்சள் பொடி போட்டுப் பிசறி வைக்கவும்.
2. வாணலியில் சீரகம், சோம்பு இரண்டையும் எண்ணை விடாமல் வறுத்துப் பொடிக்கவும்.
3. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பொடித்து வைத்த சீரகம், சோம்பு போடவும். வாசணை வந்ததும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு வதக்கவும்.
5. அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
6. அனைத்தும் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
7. பின்னர் அதில், கோழித் துண்டுகளையும், உப்பையும் போட்டுப் பிரட்டி அடுப்பை குறைத்து வைக்கவும். அவ்வப்போது திறந்துக் கிளறி விடவும்.
8. சுமார் இருபது நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.