மிளகு பூண்டுக் கோழிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் - 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. பூண்டு - 15 பற்கள்
4. மிளகுத்தூள் - 3 தேக்கரண்டி
5. இஞ்சி - சிறிது
6. தயிர் - 3 தேக்கரண்டி
7. சோம்பு - 1/2 தேக்கரண்டி
8. ஏலக்காய் - 2 எண்ணம்
9. பிரியாணி இலை - 2 எண்ணம்
10. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
11. கரம்மசாலாத்தூள் - 3/4 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. மிக்ஸியில் பூண்டைப் பாதியாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள், அரைத்து வைத்த பூண்டு பாதியளவு, தயிர், மிளகாய்த்தூள், தயிர் 1 தேக்கரண்டி, உப்பு சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. அத்துடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, அரைத்து வைத்தப் பூண்டு, சிக்கன் கலவை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
6. தொடர்ந்து அதனுடன் தயிர், உப்பு சேர்க்கவும்.
7. இறுதியாக மிளகுத்தூள், கரம்மசாலா, கறிவேப்பிலை சேர்த்துப் பச்சை வாகனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.