நண்டுக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நண்டு- 6 எண்ணம்
2. இஞ்சி- சிறியது
3. வெங்காயம்- 100 கிராம்
4. நல்லெண்ணெய்- 100 மி.லி
5. தேங்காய்- பாதி
6. வற்றல்- 6 எண்ணம்
7. சீரகம்- 1 மேஜைக் கரண்டி
8. கசகசா- 1 மேஜைக் கரண்டி
9. பூண்டு- 2 பல்
10. உப்பு, மஞ்சள்- தேவையான அளவு
செய்முறை:
1. நண்டின் ஓடு, கால்களை ஒதுக்கி விட்டு நடுப்பாகத்தில் உள்ள மூளை போன்ற பாகத்தை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் இஞ்சி, வெங்காயம், பூண்டு இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
3. அதன்பிறகு அதில் நண்டைப் போட்டு வதக்கவும்.
4. மற்ற மசால் பொருட்கள் அனைத்தும் அரைத்து உப்பு சேர்த்து தேங்காய்ப் பாலில் கலக்கி நண்டு உள்ள கலவையில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
5. குழம்பு நன்றாக கொதிக்கவும், வற்றினால் போல் வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.