நண்டு ரசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நண்டு கால்கள் – 10 எண்ணம்
2. புளி – எலுமிச்சை அளவு
3. பூண்டு - 4 பல்
4. ரசப்பொடி – 3 தேக்கரண்டி
5. மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
7. கடுகு - 1/4 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
10. கறிவேப்பிலை – சிறிது
11. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து, அதன் ஓடுகள் உடைபடும்படி தட்டித் தனியாக வைக்கவும்.
2. பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. புளியைத் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
4. கரைத்த புளிக் கரைசலில், ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, தட்டி வைத்திருக்கும் நண்டு கால்கள், பூண்டு விழுது ஆகியவற்றைப் போடவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போட்டுப் பொறியும் போது, கருவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போடவும்.
6. அதனுடன் நண்டுக்கால்கள் கலந்த புளிக் கரைசலைச் சேர்த்து வேக வைக்கவும்.
7. நண்டுக் கால்கள் வெந்து, ரசம் கொதித்ததும் மல்லித் தழைகளைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.