நண்டு வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நண்டு – 5 எண்ணம்
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. பூண்டு – 5 பல்
4. இஞ்சி – 1 அங்குலத் துண்டு
5. தக்காளி – 1 எண்ணம்
6. சின்ன வெங்காயம் – 50 கிராம்
7. மிளகாய் வற்றல் – 10 எண்ணம்
8. சீரகம் – 1 தேக்கரண்டி
9. மல்லி – 2 தேக்கரண்டி
10. நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. நண்டுகளை ஓடு நீக்கிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், சீரகம், மல்லி ஆகியவற்றை நன்கு அரைத்து வைக்கவும்.
3. பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. அடி கனமான ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
இத்துடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
5. இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும்.
6. நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.