நண்டு பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 6 எண்ணம்
2. சீரகம் - 1/2 தேக்கரண்டி
3. சோம்பு - 1 தேக்கரண்டி
4. பூண்டு - 8 பல்
5. இஞ்சி - ஒரு துண்டு
6. வெங்காயம் - 2 எண்ணம்
7. நாட்டுத் தக்காளி - 3 எண்ணம்
8. மிளகு - 1 தேக்கரண்டி
9. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
10. புளி - எலுமிச்சை அளவு
11. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. நண்டை மஞ்சள், எலுமிழ்ச்சைச் சாறு கலந்த நீரில் அரைமணி நேரம் ஊற வைத்துப் பின்னர் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் வற்றல் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
5. அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி நான்கு தேக்கரண்டி புளிச்சாறு, உப்பு போட்டு, சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கவும்.
6. பிறகு அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டைப் போட்டு, நன்றாகக் கொதி வந்தவுடன் மூடி, தீயைக் குறைத்து வைத்துச் சுருளச் சுருளக் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: நண்டு வேக வைக்கவும் போது, நண்டின் ஓடுகளைத் தட்டி ஓட்டை செய்து, மசாலாவை உள்ளே செல்லும்படி செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.