நண்டு லாலிபாப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 6 எண்ணம்
2. முட்டை - 1 எண்ணம்
3. பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி
4. மைதா மாவு - 50 கிராம்
5. பிரெட் க்ரம்ப்ஸ் - 100 கிராம்
6. வெங்காயம் - 1 எண்ணம்
7. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
8. மல்லித்தழை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றிக் கொதி வந்ததும் நண்டுகளைப் போட்டு வேக விடவும்.
2. நண்டு நன்றாக வெந்ததும், ஆற வைத்து ஓடுகளை உடைத்துச் சதைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
3. அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
4. பிறகு, அதில் இருந்து கொஞ்சமாக எடுத்து லாலிபாப் வடிவில் செய்து அதில் குச்சியோ அல்லது நண்டின் கால்களையோ செருகலாம்.
5. ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்துக் கலக்கி வைக்கவும்.
6. மற்றொரு கிண்ணத்தில் பிரெட் க்ரம்ஸ் தயாராக வைக்கவும்.
7. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஒவ்வொரு லாலிபாப்பையும் முதலில் முட்டையில் முக்கி, பிறகு பிரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.