நண்டு ரசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 250 கிராம்.
அரைக்க
2. சாம்பார் வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 3 எண்ணம்
5. பூண்டு - 4 பல்
6. இஞ்சி - சிறிது
7. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. மல்லி - சிறிதளவு
தாளிக்க
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. மிளகு - 1/2 தேக்கரண்டி
12. சீரகம் - 1/2 தேக்கரண்டி
13. சோம்பு - 1/2 தேக்கரண்டி
14. எண்ணெய் - தேவையான அளவு
15. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. நண்டை நன்றாகச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. மல்லித்தழை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் அரைக்கக் கொடுத்தப் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
4. அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு பத்து நிமிடம் வேகவிடவும்.
5. நண்டு நன்றாக வெந்ததும், மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அதில் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து நண்டு ரசத்தில் கொட்டிக் கலந்து இறக்கவும்.
6. மல்லித்தழை தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.