நண்டு ரசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 4 எண்ணம்
2. தக்காளி - 2 எண்ணம்
3. சின்ன வெங்காயம் - 50 கிராம்
4. பூண்டு - 5 பற்கள்
5. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
6. புளி - சிறிது
7. சீரகம் - 2 தேக்கரண்டி
8. மிளகு - 2 தேக்கரண்டி
9. மல்லி - 2 தேக்கரண்டி
10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
11. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
12. கருவேப்பிலை - சிறிது
13. பெருங்காயம் - சிறிது
14. உப்பு - தேவையான அளவு
15. எண்ணெய் - தேவையான அளவு
16. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. நண்டைச் சிறியதாக கையால் உடைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. சிறிது தண்ணீரில் புளியை ஊற வைக்கவும்.
3. ஒரு மின்னரவையில் சீரகம், மிளகு, மல்லி, பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், அரை தக்காளி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம் போட்டு, நன்கு பொறிந்த பின்பு கருவேப்பிலை சேர்க்கவும்.
5. அதில் நறுக்கி அல்லது தட்டி வைத்த சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனுடன் பூண்டைத் தட்டிச் சேர்த்துக் கொள்ளவும்.
7. இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு, தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
8. பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, சிறிது மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
9. அதனைத் தொடர்ந்து, அரைத்து வைத்திருக்கும் வைத்த ரச மசாலாவைச் சேர்த்து வதக்கவும்.
10. அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
11. அதனுள் தட்டி வைத்துள்ள நண்டைச் சேர்த்து அப்படியே வேகவிடவும்.
12. அதில் புளிக்கரைச்சலை சேர்த்து ரசம் பொங்கிவரும் பக்குவத்தில் மல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.