நண்டு வடை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நண்டு பெரிய சைஸ் -1/2 கிலோ
2. வெங்காயம் -2 எண்ணம்
3. பச்சை மிளகாய்- 6 எண்ணம்
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. சோம்புத் தூள் -1 தேக்கரண்டி
6. பட்டை - 2 எண்ணம்
7. இஞ்சி - சிறிது
8. பொட்டுக்கடலைத் தூள் - 4 தேக்கரண்டி
9. சோளமாவு - 4 தேக்கரண்டி
10. எண்ணெய்- தேவையான அளவு
11. மல்லித்தழை - சிறிது
12. பிரிஞ்சி இலை-1 எண்ணம்
13. உப்பு-தேவையான அளவு.
அரைக்க
1. தேங்காய்த்துருவல் - 50 கிராம்
2. சோம்பு -1 தேக்கரண்டி
3. கசகசா - 1 தேக்கரண்டி
4. கரம்மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் -7 எண்ணம்
செய்முறை:
1. நண்டைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு சுத்தம் செய்த நண்டு, மஞ்சள் தூள், பிரிஞ்சி இலை போட்டு வேக விடவும்.
3. வெந்த நண்டுவின் தசைப்ப்பகுதியை மட்டும் கரண்டியால் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
4. நண்டு தசைப்பகுதியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு பொடி, தட்டிய பட்டை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொட்டுக் கடலைப் பொடி, சோளமாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
5. பிசைந்த மாவைக் கையில் எண்ணெய் தொட்டுச் சிறிய வடைகளாகத் தட்டவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தட்டிய வடைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: நண்டு வடையை எண்ணெயில் பொரிக்கும் போது உடைந்தால் முட்டை ஒன்றை உடைத்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.