நண்டு மசாலா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 500 கிராம்
2. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
3. தக்காளி – 3 எண்ணம்
4. மஞ்சள் தூள் – 2 1/2 தேக்கரண்டி
5. தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
7. பூண்டு – 15 பல்
8. மிளகு – 1 மேசைக்கரண்டி
9. சோம்பு – 2தேக்கரண்டி
10. கசகசா - 1 தேக்கரண்டி
11. பட்டை - சிறிய துண்டு
12. கல் பாசி – சிறிது
13. கறிவேப்பிலை – 1 கொத்து
14. எண்ணெய் – தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. நண்டுத் துண்டுகளை மஞ்சள்தூள் (2 தேக்கரண்டி) கலந்து 1/2 மணி நேரம் வைக்கவும்.
2. அதன் பிறகு நண்டுத் துண்டுகளை மூன்று அல்லது நான்கு முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
3. தேங்காய்த் துருவல், மிளகாய், பூண்டு, மிளகு, சோம்பு (1 தேக்கரண்டி) , கசகசா போன்றவைகளைச் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் பட்டை, கல்பாசி, சோம்பு (1 தேக்கரண்டி), கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. அதன் பின், அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுத் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
9. கடைசியாக மஞ்சள் தூள் (1/2 தேக்கரண்டி), உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
10.நண்டுத் துண்டுகள் வெந்து, குழம்பு போல் வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.
குறிப்பு: நண்டு வடையை எண்ணெயில் பொரிக்கும் போது உடைந்தால் முட்டை ஒன்றை உடைத்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.