முட்டை பஜ்ஜி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 3 எண்ணம்
2. கடலை மாவு - 1 கப்
3. அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. இஞ்சிப் பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. சிகப்பு நிறத்தூள் (உணவுக்கானது) - சிறிது
8. சோடா உப்பு - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முட்டையை வேகவைத்து ஆறியதும், அதை நீளவாக்கில் நான்கு துண்டுகளாகக் கத்தியால் கீறி வைக்கவும்.
2. மிளகுத்தூள், உப்புத்தூள் இரண்டையும் கலந்து வைக்கவும்.
3. கீறி வைத்த முட்டையின் உள்பகுதியில் சிறிது மிளகு, உப்புத்தூள் கலவையைத் தூவி விடவும்.
4. கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சிப் பூண்டு விழுது, சோடா உப்பு, சிகப்பு நிறத்தூள் ஆகியவற்றில் சிறிது தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
6. கீறி வைத்து இருக்கும் முட்டையைக் கலந்து வைத்திருக்கும் மாவில் மூழ்க வைத்து, அதை உடைந்து விடாமல் காய்ந்த எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும். .
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.