முட்டை மிளகுத் தோசை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தோசை மாவு - 2 கப்
2. முட்டை - 2 எண்ணம்
3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் தோசை மாவை உப்பு போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு கிண்ணத்தில் ஒரு சிட்டிகை உப்பு, இரண்டு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுச் சில துளிகள் தண்ணீர் ஊற்றிக் கலந்து, அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைக்கவும்.
3. தோசைக்கல் நன்கு காய்ந்ததும் தோசைமாவை ஊற்றி, தோசை அளவிற்குத் தேய்த்துவிடவும்.
4. அதன் மீது அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி நன்கு பரப்பி விடவும். தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
5. தோசை நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஒரு சில நொடிகளில் எடுத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.