முட்டை போண்டா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 2 எண்ணம்
2. கடலை மாவு - 1 கப்
3. அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
6. கேசரிப்பொடி - 1 தேக்கரண்டி
7. சோடா உப்பு - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முட்டையை வேகவைத்து தோல் நீக்கி இரண்டு துண்டாக வெட்டி வைக்கவும்.
2. கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கேசரிப்பொடி, சோடா உப்பு, உப்பு என அனைத்தையும் சிறிது தண்ணீர் ஊற்றித் தோசை மாவு பதத்திற்குக் கலந்து கொள்ளவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிதமான நெருப்பில் கீறி வைத்திருக்கும் முட்டை ஒவ்வொன்றாக எடுத்து, அதை மாவில் தோய்த்து, எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.