முள்ளங்கி முட்டைப் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முள்ளங்கி - 1/4 கிலோ
2. முட்டை - 3 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. கருவேப்பிலை - சிறிதளவு
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முள்ளங்கியை சிறு சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், பச்சைமிளகாய் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டு வெடித்ததும், வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
4. பின் முள்ளங்கியை சேர்த்து சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
5. முள்ளங்கி வெந்தவுடன் முட்டையை உடைத்து அதில் ஊற்றி முட்டை வேகும் வரை நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.