முட்டைத் தொக்கு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 3 எண்ணம்
2. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
4. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முட்டையை உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், உப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை விழுதாக அரைத்தெடுக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்துச் சுருள வதக்கவும்.
4. வேகவைத்த முட்டையை கீறிவிட்டு மசாலாவில் சேர்த்துக் கிளறவும்.
5. முட்டையில் மசாலா நன்கு சேர்ந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.