முட்டை சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 2 கப்
2. முட்டை - 3 எண்ணம்
3. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
5. நெய் - 2 கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. அரிசியை ஊற வைத்துச் சிறிது உப்பு சேர்த்து சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றிக் காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகுத்தூள் , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
3. முட்டை நன்கு வெந்து பொரியல் பதம் வந்தவுடன் அதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.