மிளகு முட்டை வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 4 எண்ணம்
2. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 2 எண்ணம்
5. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முட்டையை அவித்து அதனை நீளவாக்கில் பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
3. வானெலியில் எண்ணைய் ஊற்றிச் சூடானதும், அதில் சிறிது மஞ்சள் தூளை போட்டு நறுக்கி வைத்த முட்டையைப் பொறித்தெடுக்க வேண்டும்.
4. பின்னர் அதே வானெலியில் சிறிது கடுகு உளுந்து போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் தேவையான அளவிற்கு மிளகுத்தூள், மிளகாய்த்தூளைப் போட்டு வறுத்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.