முட்டை மசாலா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 5 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. மல்லித்தழை - சிறிது
7. வெங்காயத்தாள் - சிறிது
8. சோம்பு - 1 தேக்கரண்டி
9. கடுகு - 1 தேக்கரண்டி
10. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
11. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முட்டையை வேகவைத்து, நீளவாக்கில் பாதியாக வெட்டி வைக்கவும்.
2. தக்காளி, மல்லித்தழை, வெங்காயத்தாள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததுதும் அதில், கடுகு, சோம்பு போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
6. அதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது, முட்டையைச் சேர்த்து, உடையாமல் கிளறி, மல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.