முட்டை ரோஸ்ட்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 4 எண்ணம்
2. கடுகு - 1/2 தேக்கரண்டி
3. வெங்காயம் - 3 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
8. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
9. நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முட்டையை வேக வைத்து எடுத்து வைக்கவும்.
2. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயந்ததும், அதில் கடுகு போட்டுப் பொரிந்ததும். நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வெங்காயம் சுருளும் வரை வதக்கவும்.
3. வெங்காயம் நன்கு சுருண்டு வதங்கிய பின்பு, அதில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. நறுக்கிய தக்காளியை அதனுடன் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
6. வேகவைத்து,தோலுறித்து வைத்திருக்கு முட்டையை நான்கு புறமும் கீறி, இந்த மசாலாவுடன் சேர்த்து நன்கு பிரட்டவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.