பிரெட் ஆம்லெட்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 3 எண்ணம்
2. பிரெட் துண்டு - 6 எண்ணம்
3. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
2. அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிரெட் துண்டைப் பரப்பி, சிறிது எண்ணெய் விட்டு, இருபுறமும் பிரெட்டை திருப்பிப் போடவும்.
4. பின்னர், பிரெட்டின் மேல் அடித்து வைத்த முட்டை கலவையை ஒரு தேக்கரண்டி அளவு ஊற்றிப் பரப்பி விட்டு, லேசாக வேக விடவும்.
5. அதன் பிறகு, பிரெட்டைத் திருப்பிப் போட்டு, அதன் மீதும் ஒரு தேக்கரண்டி முட்டைக் கலவையை ஊற்றிப் பரப்பி விட்டு லேசாக வேக விடவும்.
6. இருபுறமும் தேவைக்கேற்பத் திருப்பிப் போட்டு பொன்னிறமாகச் சிவந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.