பிரெட் ஆம்லெட்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 3 எண்ணம்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - தேவையான அளவு
8. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
11. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
12. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
13. தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி
14. கறிவேப்பிலை - சிறிது
15. மல்லித் தழை - சிறிது
16. எண்ணெய் - தேவையான அளவு
17. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் போட்டுக் கொதிக்க விட்டு ஆறியதும் தோலை உரித்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
3. முந்திரி, தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் முட்டை, மிளகுத் தூள், சிறிது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
5. நன்றாக அடித்த முட்டைக் கலவையைத் தோசைக்கல்லில் ஆம்லெட்டாக வார்த்து எடுக்கவும். பிரசர் குக்கரில் வைத்தும் வேக வைக்கலாம்.
6. வேகவைத்த முட்டைக் கலவையைச் சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
8. வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
9. அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
10. தக்காளி நன்றாக வதங்கியதும், அதில் அரைத்த வைத்துள்ள தேங்காய் விழுது, 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
11. குழம்பு நன்றாகக் கொதித்துக் கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது சதுரமாக நறுக்கி வைத்துள்ள முட்டைத் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
12. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.