முட்டை நூடுல்ஸ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நூடுல்ஸ் - 150 கிராம்
2. முட்டை - 2 எண்ணம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. குடமிளகாய் - 1 எண்ணம்
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
8. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
9. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. மல்லித் தழை - சிறிது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
2. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து கொதிக்க விடவும்.
3. நூடுல்ஸ் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் வடித்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசித் தனியாக வைக்கவும்.
4. வெங்காயம், தக்காளி, குடமிளகாய் மூன்றையும் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
5. அடுப்பில் வாணலியை வைத்து மூன்று மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
7. பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சோயா சாஸ், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
8. வதக்கியவற்றைக் கடாயில் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொரு புறத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
9. முட்டையை நன்றாகக் கிளறி பொடிமாஸ் மாதிரி செய்து கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் கிளறவும்.
10. இப்போது நூடுல்ஸ் சேர்த்து நன்றாகக் கிளறி இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
11. மல்லித் தழையைச் சேர்த்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.