முட்டைக் கத்தரிக்காய்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. முட்டை – 2 எண்ணம்
2. கத்தரிக்காய் – 2 எண்ணம்
3. மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
4. மிளகாய்தூள் – 3/4 தேக்கரண்டி
5. கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
7. கேரட் – 1 எண்ணம்
8. வெங்காயம் – 1 எண்ணம்
9. மல்லி இலை – சிறிது
10. நல்லெண்ணெய் – தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் கத்திரிக்காயை நன்கு தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்துவிட்டு. பின்னர் அதனை சிறிய சிறிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயுடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது மஞ்சள்தூள், மிளகாய்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
4. அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் கேரட், வெங்காயம் மற்றும் மல்லியிலையைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
5. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கத்திரிக்காய்களை சேர்த்து முன்னும் பின்னும் பிரட்டி நன்கு வேக வைத்து எடுக்கவும்.
6. கத்தரிக்காய் நன்கு வெந்தவுடன் அதன் மேல், நாம் தயார் செய்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஊற்றி முன்னும் பின்னும் பிரட்டி வேகவைத்துப் பின்னர் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.