மீன் கட்லெட்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மீன் (சதைப் பற்றுடையது) – 1/2 கிலோ
2. பச்சை மிளகாய் – 5 எண்ணம்
3. இஞ்சி – ஒரு துண்டு
4. பூண்டு – 10 பற்கள்
5. மைதா – 3 தேக்கரண்டி
6. பிரெட் தூள் – 100 கிராம்
7. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
8. உருளைக்கிழங்கு – 1 எண்ணம்
9. மல்லித் தழை – சிறிது
10. புதினா – சிறிது
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. மீனைக் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. மீனை ஆவியில் வேக வைத்து முள் எடுத்து விட்டு, அதை அப்படியே உதிர்த்து வைக்கவும்.
3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
6. பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை மசாலாவாக அரைத்துக் கொள்ளவும்.
7. மீனில் மசாலா, மசித்த உருளைக்கிழங்கு போட்டு பிசைந்து கொள்ளவும்.
8. ஒரு பாத்திரத்தில் மைதாவைப் போட்டுத் தண்ணீராகக் கரைத்து வைக்கவும்.
9. பிரெட் தூளை ஒரு தட்டில் பரவலாகப் போட்டு வைக்கவும்.
10. பிசைந்த மீன் கலவையை வடையாக தட்டிக் கொள்ளவும்.
11. தட்டிய மீன் வடையைக் கரைத்த மைதாவில் தோய்த்துப் பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும்.
12. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வடை போல் தட்டிய மீனைப் போட்டுச் சிவக்க வறுத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.