மத்தி மீன் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மத்தி மீன் -1/4 கிலோ
2. இஞ்சிப் பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
5. எலுமிச்சை- 1 பழம் (சிறியது)
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. மீனைச் சுத்தம் செய்து எலுமிச்சை சாறில் மீன்களைப் புரட்டவும்.
2. பின்னர் இஞ்சிப் பூண்டு விழுதை மீன்களின் மீது தடவவும்.
3. மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மீன்களை அதில் புரட்டி எடுக்கவும்.
4. தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் மீனைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகவும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.