மிளகு மசாலா மீன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மீன் - 500 கிராம்
2. டால்டா - 300 மி.லி
3. கடலை மாவு - 100 கிராம்
4. மிளகுத்தூள் - 25 கிராம்
5. எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. மீனை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.
2. மீன் மேல் எலுமிச்சைச் சாறு ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து டால்டா விட்டுக் காய்ந்ததும், அதில் தனித்தனியாக மீனை அடுக்கவும்.
4. அதன் மேல் உருகிய டால்டா சிறிது விடவும்.
5. ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.