கணவாய் மீன் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கணவாய் மீன் - 1 கிலோ
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
7. சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
9. நல்லெண்ணெய் - தேவையான அளவு
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
12. கருவேப்பிலை - சிறிது
13. மல்லித்தழை - சிறிது
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் மீன் துண்டுகளைப் போட்டுச் சிறிது உப்பு, கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான நெருப்பில் வேக விட வேண்டும்.
2. கனவாய் மீன்கள் வேகும் போது அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டிக் கீழேக் கொட்டிவிட வேண்டும். (இப்படிக் கொட்டிவிடுவதால் மீனிலிருக்கும் கெட்ட வாசனை போய்விடும்)
3. வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
5. பின்னர் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. அவை நன்கு வதங்கியதும், தக்காளி, பூண்டு விழுது, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
7. நன்றாக வதக்கியப் பிறகு, அதில் கனவாய் மீன் துண்டுகள், மிளகாய்த்துாள், சீரகத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும்.
8. அவ்வப்போது அடிபிடித்து விடாமல் கிளறிவிட வேண்டும்.
9. மீன் துண்டுகள் நன்றாக வெந்ததும், மல்லித் தழையைத் தூவி இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.