சாலை மீன் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சாலை மீன் – 20 எண்ணம்
2. தேங்காய் -1 மூடி
3. தக்காளி – 3 எண்ணம்
4. சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
5. வெந்தயம் - 3 தேக்கரண்டி
6. கடுகு – 2 தேக்கரண்டி
7. பூண்டு – 6 பல்
8. பச்சை மிளகாய் -2 எண்ணம்
9. கருவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை – சிறிது
11. புளி – எலுமிச்சை அளவு
12. மீன் மசாலாத்தூள் – 6 தேக்கரண்டி
13. எண்ணெய் – தேவையான அளவு
14. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. தேங்காயைத் துருவிப் பால் பிழிந்து, கெட்டியாக எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். பிழிந்தெடுத்த பூவை மீண்டும் தண்ணீர் விட்டு, இரண்டாவது முறையாகப் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. முதல் பாலில் புளி சேர்த்து ஊற வைக்கவும்.
3. சுத்தம் செய்து வைத்த மீனில் மீன் மசாலாத்தூள், கைகளால் நசுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சிறிதளவு வெந்தயம், நறுக்கிய பூண்டு, மல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து அவற்றுடன் தேங்காய்ப் பாலில் பிசைந்த புளிக்கலவையை ஊற்றவும்.
4. மீதமுள்ள இரண்டாது பாலை அதில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்த பின் தீயைச் சுருக்கி வைக்கவும்.
5. வேறொரு கடாயில் எண்னெய் ஊற்றிக் காய்ந்த பின் கடுகு போட்டுப் பொறிய விடவும். பொறிந்து வெடித்த கடுகுடன் நறுக்கிய பூண்டு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். 6. அதன் பின் சிறு வெங்காயம் சேர்த்து பொன் நிறத்தில் வரும் போது, கருவேப்பிலை போட்டு இந்த தாளிப்பைக் கொதித்துக் கொண்டிருக்கும் மீன் குழம்பு மீது ஊற்றி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.