வாழை மசாலா மீன்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சீலா மீன் – 1/2 கிலோ
2. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
4. உப்பு – தேவையான அளவு
5. இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மசாலாவுக்கு
6. பல்லாரி வெங்காயம் - 4 எண்ணம்
7. தக்காளி – 3 எண்ணம்
8. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
9. மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
10. மல்லித் தூள் – ஒரு தேக்கரண்டி
11. பூண்டு – 6 பல்
12. இஞ்சி – சின்ன துண்டு
13. கறிவேப்பிலை – சிறிது
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. மீன் துண்டுகளை மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்துப் பிரட்டி அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
2. ஒரு தோசைக்கல்லில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் மீன் துண்டுகளை இலேசாக வறுத்து எடுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
4. பிறகு இதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. பிறகு தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள் , மல்லித்தூள் , உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியான குழம்பு பதம் வருவது போல் குறைந்த நெருப்பில் மசாலாவை வேக வைத்து எடுத்து வைக்கவும்.
7. வாழை இலையினை சிறு தீயில் மேலாகக் காட்டி சிறு துண்டாக நறுக்கி அதில் எண்ணெய் தடவி வைக்கவும்.
8. அதன் மேல் வதக்கி வைத்த மசாலா சிறிது வைத்து, அதன் மேலே மீன் வைத்துப் பின்னர் அதன் மேல் சிறிது மசாலாவை வைத்து வாழை இலையை மடித்து வைக்கவும்.
9. தவாவில் சிறுது எண்ணெய் விட்டு மடித்த வாழை இலையினை வைத்து மிகவும் குறைந்த நெருப்பில் வேக வைக்கவும்.
10. குறைந்த நெருப்பில் வைப்பதால் மீனுடன் மசாலா கலந்து மிகவும் சுவையாக இருக்கும்.
11. வாழை இலை பொன்னிறமாகியதும் இறக்கி விடலாம்.
12. வாழை இலை மணத்துடன் மீன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.