கிராமத்து மீன் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மீன் - 1/2 கிலோ
2.கடுகு - 1 டீஸ்பூன்
3. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. புளி - 1 எண்ணம் (எலுமிச்சை அளவு)
6. தேங்காய்த் துருவல் - 1 கப்
7. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
8. மல்லி (தனியா) - 2 மேசைக்கரண்டி
9. சீரகம் - 1 தேக்கரண்டி
10. நல்லெண்ணெய் - 50 மி.லி
11. கறிவேப்பிலை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் மஞ்சள் தூள் கலந்து, அதில் நறுக்கி வைத்திருக்கும் மீனைச் சிறிது நேரம் போட்டு வைத்திருந்து, அதன் பின்னர் மூன்று முறை கழுவி சுத்தமாக எடுத்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
3. புளியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
4. மிளகாய் வற்றல், மல்லி சீரகம் ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கிக் குளிர வைத்து சூடு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, அதில் தண்ணீர் சிறிது ஊற்றி விழுதாக அரைத்து வைக்கவும்.
5. அதனுடன் தேங்காய் துருவல், 10 சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
6. அரைத்து வைத்திருப்பதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
7. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயம், தக்காளியை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
8. அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
9. குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, மீன் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, பத்து நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.