கணவாய் மீன் பொரியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கணவாய் மீன் - 300 கிராம்
2. இஞ்சிப் பூண்டு விழுது - 3 மேசைகரண்டி
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
10. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
3. கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் (சோம்பு), கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
4. தாளிசத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கவும்.
6. அதில் ஊறவைத்த கணவாய் மீன் கலவையைப் போட்டு, மிதமான நெருப்பில் மூடி போட்டு வேக விடவும்.
7. பதினைந்து நிமிடங்களில் கணவாய் மீன் வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த்தன்மை முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து, உதிரியாக வரும் போது மல்லித்தழை சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.