சுறா மீன் புட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சுறா மீன் - 400 கிராம்
2. நறுக்கிய இஞ்சி - 1½ மேசைக்கரண்டி
3. வெங்காயம் - 100 கிராம்
4. பச்சைமிளகாய் - 5 எண்ணம்
5. நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
7. சோம்பு - 1 தேக்கரண்டி
8. எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - 1 கொத்து
10. மல்லித்தழை - சிறிது
11. எண்ணெய் - 50 மி.லி.,
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துத் தோலுரித்து உதிர்த்து வைக்கவும்.
2. பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் உதிர்த்து வைத்திருக்கும் சுறா மீனைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
5. மீன் நன்றாக உதிர்ந்து, நன்கு வதங்கியதும் இறக்கி, மல்லித்தழையைச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.