அயிரை மீன் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அயிரை மீன் – 250 கிராம்
2. வெங்காயம் 250 கிராம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. பூண்டு- 10 பல்
5. மிளகாய் -3 எண்ணம்
6. எண்ணெய்- 3 கரண்டி
7. கடுகு, உ. பருப்பு – 1/2 கரண்டி
8. வெந்தயம் – கால் கரண்டி
9. மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
10. மல்லித்தூள்- 1 மேசைக்கரண்டி
11. புளி- சிறிய எலுமிச்சை அளவு
12. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
13. உப்பு – தேவையான அளவு
14. கருவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை – சிறிது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் அயிரை மீனுடன் கல் உப்பு போட்டு மூடி போட்டு மூடி விட வேண்டும். அது துடிப்பு அடங்கியதும் நன்றாக மூன்று அல்லது நான்கு முறை தண்ணீர் விட்டுக் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
2. சிறிது தண்ணீரில் புளியைச் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உ. பருப்பு, வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி மசிந்தவுடன், உப்பு, மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும்.
7. மசாலா வதங்கிய பின்பு, அதில் புளி கரைத்த தண்ணீர் சேர்க்கவும்.
8. நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும் மீனைச் சேர்க்க வேண்டும்.
9. சிறிது நேரம் கழித்துத் தேங்காய்த் துருவல் சேர்க்க வேண்டும்.
10. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.