ஆட்டுக்கறி வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மட்டன் - 1/2 கிலோ
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
6. இஞ்சிப் பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
7. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
8. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. ஆட்டுக்கறியைச் சுத்தமாகக் கழுவி உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
2. வேக வைத்த ஆட்டுக்கறியில் இஞ்சிப் பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்தூள் முதலியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
3. ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி ஆட்டுக்கறியைப் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
4. வறுத்த கறியின் மேல், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.