கிராமத்து ஆட்டுக்கறிக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி – 3/4 கிலோ
2. சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
3. தக்காளி – 1 எண்ணம்
4. மிளகாய் வற்றல் – எண்ணம்
5. மல்லி – 1 மேசைக் கரண்டி
6. மிளகு – 2 தேக்கரண்டி
7. கடுகு,- 1/2 தேக்கரண்டி
8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
9. உளுந்து - 1/2 தேக்கரண்டி
10. கடலைப் பருப்பு – 1/2 தேக்கரண்டி
11. பட்டை, லவங்கம் - சிறிது
12. கசகசா – 1 தேக்கரண்டி
13. ஏலக்காய் – 1 எண்ணம்
14. தேங்காய் – 1/4 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
15. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
16. சோம்பு – 1/2 தேக்கரண்டி
17. பூண்டு - 5 பற்கள்
18. உப்பு - தேவையான அளவு
19. கறிவேப்பிலை - சிறிது
20. மல்லித்தழை - சிறிது
21. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. சுத்தம் செய்த ஆட்டுக் கறியைத் தனியாக தண்ணீர் விட்டு வேக விடவும்.
2. ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனித்தனியாக வறுக்கவும்.
3. இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
6. நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. அதன் பின் வேக வைத்த ஆட்டுக்கறியைச் சேர்க்கவும்.
8. அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, மஞ்சள் தூள், ஆட்டுக்கறி வேகவைத்த தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
9. எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.