ஆட்டுக் குடல் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்குடல் - 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 150 கிராம்
3. பூண்டு - 10 பல்
4. தக்காளி - 3 எண்ணம்
5. இஞ்சிப் பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
7. மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
9. புளிக்கரைசல் - 1/4 கப்
10. தேங்காய் - 1 மூடி
11. கசகசா - 1 தேக்கரண்டி
12. சோம்பு - 1 தேக்கரண்டி
13. சீரகம் - 1 தேக்கரண்டி
14. எண்ணெய் - தேக்கரண்டி
15. கறிவேப்பிலை - சிறிது
16. கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை:
1. ஆட்டுக்குடலைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
2. தேங்காய், கசகசா, சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சோம்பு, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
4. அதில் கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.
6. அத்துடன் சுத்தம் செய்து வைத்த ஆட்டுக் குடல் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
7. அதன் பின் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
8. தண்ணீர் பிரிந்து வரும் போது, மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்க்கவும்.
9. இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்.
10. வெந்த பின்பு, தேங்காய் விழுது, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும்.
11. சில நிமிடங்கள் கொதித்த பின்பு, மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.