தாளிச்சா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி - 1 கிலோ
2. கடலைப் பருப்பு - 1 கோப்பை
3. புளி - எலுமிச்சை அளவு
4. வெங்காயம் - 2 பெரியது
5. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
6. இஞ்சிப் பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
8. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
9. கறிவேப்பிலை - சிறிது.
10. உருளைக்கிழங்கு - 250 கிராம்
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், மிளகாய் போன்றவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
2. புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் ஆட்டுக்கறி, உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் பருப்பைப் போட்டு வேகவைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
6. அதில் இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போன்றவற்றைப் போட்டு வதக்கவும்.
7. பின்னர் வேகவைத்த ஆட்டுக்கறியைப் போட்டு வதக்கவும்.
8. உருளைக்கிழங்கைத் தோலுரித்து, நீளத்துண்டுகளாக வெட்டிச் சேர்த்துக் கொள்ளவும்.
9. வேகவைத்தப் பருப்பைக் கூழாக்கி இத்துடன் சேர்க்கவும்.
10. பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றையும் சேர்த்து வேகவிடவும்.
11. இத்துடன் புளித்தண்ணீர் சேர்த்துத் தீயைக் குறைத்து மெல்லிய தீயில் நன்றாக வேகும் வரை வைத்திருந்து பிறகு பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.