மதுரை மட்டன் சுக்கா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மட்டன் – 250 கிராம்
2. சின்ன வெங்காயம் – 1/4 கப்
3. பூண்டு – 10 பற்கள்
4. தக்காளி – 1 எண்ணம்
5. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
7. மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
8. தேங்காய் பால் – 2 மேசைக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு
தாளிக்கbr>
10. சோம்பு – 1/2 தேக்கரண்டி
11. பட்டை – சிறு துண்டு
12. கிராம்பு – 2 எண்ணம்
13. பிரியாணி இலை – 1 எண்ணம்
14. கறிவேப்பிலை – சிறிது
15. எண்ணெய் – 2 தேக்கரண்டி.
செய்முறை:
1. முதலில் மட்டனைச் சுத்தமாகக் கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.
3. பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மூடி போட்டு வேக வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காட்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்துத் தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
5. அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
6. மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய்ப்பால் சேர்த்து, தேங்காய் பால் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.